தேசிய வாசிப்பு மாதமும் பரிசளிப்பு விழாவும் – 2023.12.20

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வலிகாமம் மேற்கு பிரதேசசபையின் பொதுநூலகங்களான சங்கானை பொதுநூலகம் சுழிபுரம் பொதுநூலகம் வட்டுக்கோட்டை பொதுநூலகம் அராலிபொதுநூலகமும் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கிடயில் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு விழாவhனது 2023.12.20 ஆம் திகதி வலிகாமம் மேற்கு பிரதேசசபையின் தலைமை அலுவலகத்தில் 10.00 மணியளவில் நடைபெற்றது. குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திருமதி கவிதா உதயகுமாரர் (பிரதேச செயலர் சங்கானை) கௌரவ விருந்தினராக வைத்திய கலாநிதி.யோ.யதுநந்தன் (சுகாதார வைத்திய அதிகாரி) சிறப்பு விருத்தினர்களாக திருமதி நாச்சிமார் செல்வநாயகம்(ஓய்வு நிலை முதுநிலை விரிவுரையாளர் இந்து நாரீக நுண்கலை தலைவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்) மற்றும் திருமதி.ராணி சீதரன் (ஓய்வுநிலை சிரேஸ்ட விரிவுரையாளர் தேசிய கல்வி நிறுவகம் மகரகம) மற்றும் திரு.தில்லையம்பலம் மதிவதனதனன் (ஓய்வுநிலை அதிபர்)ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு சபையின் செயலாளர் சண்முகராசா பாலரூபன் அவர்கள் தலைமையில் வெகுவிமர்சையாக நடாத்தப்பட்டது. அத்துடன் அச்செயற்திட்டம் நிலைத்திற்கும் அபிவிருத்தி இலக்கான தகமையான கல்வியை வழங்குதை ஊக்குவிக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  
Scroll to Top