வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் வரைவு வரவு செலவுத்திட்டம் – 2025

1987ஆம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்திற்கும்இ அது தொடர்பாக காலத்திற்கு காலம் வெளியிடப்பட்ட திருத்தங்களுக்கும் அமைவாகத் தயாரிக்கப்பட்ட 2025 ஆம் நிதியாண்டிற்கான எமது சபையின் வரவு செலவுத்திட்டம் பொதுமக்கள் பார்வைக்காகவும் மற்றும் அபிப்பிராயங்கள் ஆலோசனைகளுக்காகவும் காரைநகர் வீதி, சுழிபுரத்தில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்திலும்இ சங்கானை, சுழிபுரம், வட்டுக்கோட்டை, அராலி ஆகிய உப அலுவலகங்களிலும், பொதுநூலகங்களிலும் அலுவலக நேரத்தில் 05.12.2024 இலிருந்து 19.12.2024 ஆம் திகதி வரையும், அலுவலக முகநூல் (Face Book) பக்கத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றேன். செயலாளர் வலிகாமம் மேற்கு பிரதேச சபை சுழிபுரம். 05.12.2024 CamScanner 12-05-2024 09.05

உள்ளூர் அதிகார சபைக்கான அபிவிருத்தித்திட்டம்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 2185/74ம் இலக்க 2020.07.24ம் திகதிய அதிவிஷேட வர்த்தமானப் பத்திரிகையின் மூலம் 1978ம் ஆண்டின் நகர அபிவிருத்தி அதிகார சபை சட்ட இல.41ன் கீழ் வலிகாமம் மேற்கு பிரதேச சபை நகர அபிவிருத்தி பகுதியாக வெளிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கான அபிவிருத்தித்திட்டம் பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் முகமாக சபையின் தலைமைக்காரியாலயம் மற்றும் சங்கானை, சுழிபுரம், வட்டுக்கோட்டை, அராலி ஆகிய பொது நூலகங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சபையின் இணையத்தளத்திலும் (www.valikamamwest.ps.gov.lk) முகநூல் பக்கத்திலும் (Valiwest Pradeshiya Sabha Chulipuram) மென்பிரதியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள மற்றும் பிரதேச அபிவிருத்தியில் அக்கறையுள்ள தரப்பினர் மேற்படி திட்டத்தினை பார்வையிட்டு அது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களினை எதிர்வரும் 2025.01.21ம் திகதிக்கு முன்னராக பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பன உள்ளடங்கலாக எழுத்து மூலம் சபையின் தலைமை அலுவலகத்திலோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ (valiwestps@gmail.com) அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். செயலாளர், வலிகாமம் மேற்கு பிரதேச சபை, சுழிபுரம்.

பார்வையிட இங்கு அழுத்தவும் -->

 

விதை நாற்று மண் பந்துகள் மூலம் மரநடுகை திட்டம் (23-10-2024)

நல்லூர் பிரதேசசெயலகம், விவசாய அமைச்சு வடமாகாணம், வலிகாமம் மேற்கு பிரதேசசெயலகம் என்பன வலிகாமம் மேற்கு பிரதேசசபையுடன் இணைந்து வலிகாமம் மேற்கு மூளாய் , பொன்னாலை பகுதிகளில் 10,000 விதை நாற்று மண் பந்துகள் மூலம் மரநடுகை திட்டம் 23-10-2024 அன்று மேற்கொள்ளப்பட்டது.    

உள்@ராட்சி வாரம் – 2024 இனை முன்னிட்டு சனசமூக நிலையங்களிற்கிடையே நடாத்தப்படவிருக்கும் மென்பந்து துடுப்பாட்டம் மற்றும் கயிறிழுத்தல் போட்டிகள்

எமது சபையானது உள்@ராட்சி வாரம் - 2024 இனை முன்னிட்டு சனசமூக நிலையங்களிற்கிடையே மென்பந்து துடுப்பாட்டம் மற்றும் கயிறிழுத்தல் போட்டிகளினை பின்வரும் அட்டவணைக்கு அமைவாக நடத்த தீர்மானித்துள்ளது.   திகதி:- 2024/10/17 (வியாழக்கிழமை) நேரம்:- மு.ப. 08.30 மணி இடம்:- யா/வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மைதானம்   போட்டிகளில் பங்குபற்றவுள்ள சனசமூக நிலையங்களின் விபரம்   01.அம்பாள் சனசமூக நிலையம், முதலி கோவிலடி வீதி, வட்டு தெற்கு, வட்டுக்கோட்டை. 02.கலைமகள் சனசமூக நிலையம், அராலி கிழக்கு, வட்டுக்கோட்டை. 03.கலைவாணி சனசமூக நிலையம், குலனையூர், அராலி வடக்கு, வட்டுக்கோட்டை. 04.காந்திஜீ சனசமூக நிலையம், பல்லசுட்டி, பண்ணாகம். 05.நேருஜீ சனசமூக நிலையம்,கலைநகர், வட்டு. வடக்கு, சித்தங்கேணி. 06.நிகரை அம்பாள் சனசமூக நிலையம், நிகரை வீதி, சங்கானை. 07.திருவள்ளுவர் சனசமூக நிலையம், அராலி தெற்கு, காளி கோவிலடி, வட்டுக்கோட்டை.

விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திகளுக்கான ( பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான) நியாயமான விலையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் Farm to Gate

விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திகளுக்கான ( பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான) நியாயமான விலையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் FARM TO GATE என்ற புதிய செயலி வடமாகணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. FARM TO GATE ஊடாக உற்பத்தியாளர்களிடமிருந்து நுகர்வோர் நேரடியாக தங்களுக்கு தேவையான உற்பத்திகளை மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ கொள்வனவு செய்ய முடியும். இதனூடாக விவசாயிகளும் உற்பத்தியாளர்களும் தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான நியாயமான விலையினை பெற்றுக்கொள்ள அரிய சந்தர்பம் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த செயலியில் உற்பத்தியாளர்கள் இணைந்துகொள்வதற்கான முறை கீழே துண்டுப்பிரசுரத்தில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே வலிமேற்கு பிரதேசத்தில் உள்ள உற்பத்தியாளர்களே! Farm to Gate செயலிமூலம் உங்களது உற்பத்திகளை சந்தைப்படுத்த வலிமேற்கு பிரதேசசபை உங்களை வரவேற்கின்றது. ஆர்வம் உள்ள உற்பத்தியாளர்களே Farm to Gate செயலியில் இணைந்து உங்களது உற்பத்திகளை சந்தைப்படுத்தி நியாயமான விலையை பெற்றுக்கொள்ளுங்கள். குறித்த செயலியில் பயன்படுத்துவதில் இடர்கள் உள்ளவர்கள் எமது பிரதேச சபையை நாடுங்கள் உங்களுக்கான சந்தை வாய்ப்பை நாமே Farm to Gate செயலியின் மூலம் உருவாக்கி கொடுக்கின்றோம். இது முற்றிலும் இலவசமானது. விற்பனையாளர் Smart Phone வைத்திருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. தொடர்புகளுக்காக – 021 225 0144 இற்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள்.

உள்ளுராட்சி வாரநிகழ்ச்சி 2023

உள்ளுராட்சி வாரநிகழ்ச்சி இனை முன்னிட்டு சனசமூக நிலையங்களிற்கு இடையிலான இயலளவினை மேம்படுத்தும் முகமாக துடுப்பாட்ட போட்டி வலிகாமம் மேற்கு பிரதேசசபைக்கு எல்லைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுக்கு இடையில் 17.01.2024 ஆம் திகதி வெகுவிமர்சையாக நடைபெற்றது. போட்டித்தொடரில் இறுதியாக அம்பாள் சனசமூக நிலையம் வெற்றியீட்டியது.  

சங்கானையில் பாரம்பரிய உணவுநிலையத்தின் அபிவிருத்தி வேலைகளுக்கான கேள்வி அறிவித்தல்.

சங்கானையில் பாரம்பரிய உணவுநிலையத்தின் அபிவிருத்தி வேலைகளுக்கான கேள்வி அறிவித்தல் கோரப்பட்டுள்ளது. கேள்வி படிவம் விநியோகிக்கும் திகதி -16.01.2024 தொடக்கம் 12.02.2024 கேள்விபடிவக்கட்டணம் - ரூபா 3,000.00  

தற்போது பரவி வரும் டெங்கு நோயினை தடுக்குமுகமாக டெங்கு விழப்புணர்வு குழுக் கூட்டம் வட்டார ரீதியாக நடைபெற்ற வேளை

டெங்கு நோயினை தடுக்கு முகமாக சபையின் உப அலுவலகங்களில் வட்டாரரீதியாக ஒவ்வொரு வட்டாரங்களிலும் பொதுசுகாதார பரிசோதகர், கிராம சேவை உத்தியோகத்தர், சமூர்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து மக்கள் மத்தியில் தற்போது தீவிரமாக பரவிவரும் டெங்குநோயினை தடுப்பதற்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு மக்கள் மத்தியில் விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Scroll to Top