குறித்த பயிற்சி நெறியானது வலிகாமம் மேற்கு பிரதேசத்திலுள்ள யுவதிகளினை தகமை அடிப்படையில் தெரிவுசெய்யபட்டு மூன்று நாட்களை உள்ளடக்கியதான பயிற்சிநெறியாக நடாத்தப்பட்ட அதேவேளை அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான தொழில்தகமையை வளர்த்துக்கொள்வதற்கான சந்தர்பத்தையும் இதன் மூலம் உருவாக்கி கொடுக்கப்பட்டது. குறித்த பயிற்சி நெறிக்கு வளவாராக எமது பிரதேசசைபையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரான திருமதி சிறீகௌதமி சுதர்சன் கடைமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. பயிற்சிநெறியில் பங்குபற்றிய யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.